சக வீரர்களுடன் போட்டி போட விரும்பாத தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் உருக்கம்
March 10, 2026

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார் சஞ்சு சாம்சன். இறுதிப்போட்டி மற்றும் அரைஇறுதியில் தலா 89 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.
விருது வென்ற பின் பேசிய சஞ்சு, நியூசிலாந்து தொடருக்குப் பின் தான் சந்தித்த மனவேதனையைப் பகிர்ந்து கொண்டார். அணியில் இடத்தைப் பிடிக்க சக வீரர்களுடன் போட்டியிடுவதை விட, உலகக் கோப்பை என்ற பொதுவான இலக்கிற்காகப் போராடுவதே தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.