குழந்தை ஆபாச வீடியோக்களை மொபைலில் வைத்திருப்பது இனி தண்டனைக்குரிய குற்றம்
March 9, 2026

குழந்தை ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவது மட்டுமின்றி, அவற்றை மொபைல் அல்லது கணினியில் சேமித்து வைத்திருப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் கடும் குற்றமாகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவரது டிஜிட்டல் சாதனத்தில் இத்தகைய ஆபாசப் பொருட்கள் கண்டறியப்பட்டாலே அது தண்டனைக்குரியது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின்படி, வீடியோக்களை பகிராவிட்டாலும் அவற்றை வைத்திருப்பதே குற்றமாகும். இதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சட்ட நடவடிக்கை ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.