ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி பதவி ஏற்ற கையோடு மாயமான பின்னணி என்ன

ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா காமேனி பதவி ஏற்ற கையோடு மாயமான பின்னணி என்ன

ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் முஜ்தபா காமேனி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் பதவிப் பிரமாணம் செய்ததில் இருந்து அவர் பொதுவெளியில் தோன்றாதது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் அச்சுறுத்தல் காரணமாக அவர் பதுங்கியுள்ளாரா அல்லது தாக்குதலில் காயமடைந்தாரா என்ற சந்தேகம் சர்வதேச ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.

மறுபுறம் பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் போரில் இதுவரை 168 சிறுவர்கள் உட்பட 1255 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடும் எச்சரிக்கைக்கு மத்தியில் முஜ்தபா மாயமாகி இருப்பது ஈரானின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த போர் பதற்றத்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகமும் கடும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *