விஜய்க்கு பவன் கல்யாண் கொடுத்த அட்வைஸ் மற்றும் டெல்லியின் அரசியல் நெருக்கடி

விஜய்க்கு பவன் கல்யாண் கொடுத்த அட்வைஸ் மற்றும் டெல்லியின் அரசியல் நெருக்கடி

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விஜய்யைத் தொடர்பு கொண்டு தனது கடந்த கால தோல்விகளையும் அண்ணன் சிரஞ்சீவியின் அரசியல் சறுக்கல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். தனித்துப் போட்டியிடுவதை விட கூட்டணியே வெற்றியைத் தரும் என அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இந்த ‘சென்டிமென்ட்’ அரசியல் நகர்வு தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு புறம், டெல்லி மேலிடம் விஜய்க்கு 65 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ள நிலையில், அவர் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பாஜத தரப்பு, பழைய வழக்குகளைத் தூசி தட்டத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. மார்ச் 10-ஆம் தேதி வரவிருக்கும் சிபிஐ சம்மன் இந்த அழுத்தத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணியா அல்லது அரசியல் தார்மீகமா என்ற இக்கட்டான நிலையில் இருக்கும் விஜய் எடுக்கப்போகும் முடிவு தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *