திரையரங்குகளில் இனி பார்க்கிங் கட்டணம் கிடையாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திரையரங்குகளில் இனி பார்க்கிங் கட்டணம் கிடையாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தெலங்கானா மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சினிமா டிக்கெட் வைத்துள்ள ரசிகர்களிடம் தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக இது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் எழுந்த புகார்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

சிங்கிள் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதித்த 2021 ஆம் ஆண்டு அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரேம் ராமாவத் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இனி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச பார்க்கிங் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த நகராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *