ஈரான் போர் விவகாரத்தில் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார் சசி தரூர்
March 9, 2026

ஈரான் மற்றும் மேற்கு ஆசிய பதற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெளியுறவு அமைச்சர் அறிக்கை வாசிப்பது எம்பிக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று சசி தரூர் சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றமே சரியான தளம் என்று அவர் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து அரசு மௌனம் காப்பது சரியல்ல என்றார். இந்த விவகாரத்தில் வெறும் அறிக்கையோடு நிறுத்தாமல், எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.