27 ஆண்டு கால திருமண உறவை முறிக்கிறாரா சங்கீதா? இலங்கை எம்.பி கடும் கண்டனம்
March 9, 2026

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தத் தனிப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. 27 ஆண்டுகால தம்பதியினரின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். விஜய்யின் அரசியல் வாழ்வின் உச்சகட்டத்தில் சங்கீதா எடுத்துள்ள இந்த முடிவு வருத்தமளிப்பதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஒரு யாழ்ப்பாணத் தமிழனாக இந்தச் செயலால் தான் மிகுந்த வேதனை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.