ஈரான் போர்க்களத்தில் சிக்கிய 67 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

ஈரான் போர்க்களத்தில் சிக்கிய 67 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்திற்கு இடையே, ஒரே நாளில் சுமார் 67,000 இந்தியர்கள் எல்லையை கடந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இன்று பேசிய அவர், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உறுதிப்படக் கூறினார்.

முன்னதாக, எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இந்த முக்கிய தகவலை அமைச்சர் பகிர்ந்தார். இந்த மோதலில் துரதிர்ஷ்டவசமாக இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *