கூடலூரில் காட்டு யானை அட்டகாசம் இருவர் உயிரிழந்ததால் மக்கள் போராட்டம்

கூடலூரில் காட்டு யானை அட்டகாசம் இருவர் உயிரிழந்ததால் மக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் அப்பையா மற்றும் ரவி ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதுமலை வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக உணவைத் தேடி கிராமங்களுக்குள் புகுந்த யானை, இரவு நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அவர்களைத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல விடாமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *