சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய அதிரடி மாற்றங்கள் அமல்

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் புதிய அதிரடி மாற்றங்கள் அமல்

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய நடைமுறைப்படி, ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட 21 நாட்களுக்குப் பிறகுதான் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும். மேலும், சிலிண்டர் டெலிவரியின் போது வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலுக்கு வரும் அங்கீகாரக் குறியீட்டை (DAC) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் இ-கேஒய்சி முறை தற்பொழுது அவசியமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்றாலும், முறையான விநியோகத்தை உறுதிப்படுத்தவே இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *