காமரெட்டியில் கடத்தல் நாடகமாடி மூன்று பெண் குழந்தைகளை ஏரியில் வீசிக்கொன்ற தந்தை

காமரெட்டியில் கடத்தல் நாடகமாடி மூன்று பெண் குழந்தைகளை ஏரியில் வீசிக்கொன்ற தந்தை

தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் இஸ்மாயில் என்ற ஆட்டோ ஓட்டுநர் தனது 8, 7 மற்றும் 5 வயதுடைய மூன்று பெண் குழந்தைகளை ஏரியில் வீசிக் கொலை செய்துள்ளார். கடந்த மார்ச் 7 ஆம் தேதி குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறி கடத்தல் நாடகமாடிய அவர், மனைவியின் சந்தேகத்தால் பிடிபட்டார். சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் சுமை மற்றும் பெண் குழந்தைகளை வளர்ப்பது பாரமாக இருந்ததால் இந்த கொடூரத்தை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் வரை ஏரிக்கரையிலேயே நின்று வேடிக்கை பார்த்ததாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். உலக மகளிர் தின கொண்டாட்டங்களுக்கு இடையே தந்தையே தனது மூன்று மகள்களைக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் இஸ்மாயிலை கைது செய்து குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *