நீட் தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான நீட் (NEET UG) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தேசிய தேர்வு முகமை (NTA) நீட்டித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மார்ச் 11 ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இரவு 11:50 மணி வரை கட்டணம் செலுத்த முடியும்.

விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். எனினும், திட்டமிட்டபடி மே 3 ஆம் தேதி தேர்வு நடைபெறும். கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என்பதால், மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *