மனைவியின் மீதான ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்

மனைவியின் மீதான ஆத்திரத்தில் மாமியாரின் மூக்கை அறுத்து எடுத்துச் சென்ற மருமகன்

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக மருமகன் செய்த கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஹன்லால் என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட மோதலால், காவல் நிலையம் நோக்கிச் சென்ற மாமியார் தேவியை வழிமறித்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் மாமியாரின் மூக்கை அறுத்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த தேவி தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஜலோர் போலீசார், தப்பியோடிய சோஹன்லாலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *