காதல் குறித்த ஆய்வில் 10 ஆயிரம் இளைஞர்கள் பகிர்ந்த அதிரடி தகவல்கள்
February 14, 2026

காதலர் தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் காதல் வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் தங்கள் வாழ்வில் குறைந்தது இரண்டு முறை ஆழ்ந்த காதலை அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே தாங்கள் இதுவரை எந்த உறவிலும் இருந்ததில்லை என்று கூறியுள்ளனர்.
முதிர்ச்சியற்ற உணர்வுகளைத் தாண்டி வயதுக்கு ஏற்ப காதலின் அர்த்தம் மாறுவதாக உளவியலாளர்கள் கருதுகின்றனர். இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் உறவுகள் உருவாவதையும் பிரிவதையும் வேகப்படுத்தினாலும் ஒவ்வொரு அனுபவமும் ஒரு நபரை மனரீதியாக முதிர்ச்சியடையச் செய்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.