கொல்கத்தா துறைமுகத்தில் சிங்கப்பூர் கப்பலில் இருந்து குதித்த இலங்கை மாலுமி பரிதாப பலி
February 13, 2026

சிங்கப்பூரில் இருந்து கொல்கத்தா வந்த கோட்டா துனியா என்ற சரக்குக் கப்பலில் பணியாற்றிய இலங்கை மாலுமி வியாழக்கிழமை நள்ளிரவில் கங்கையில் குதித்து உயிரிழந்தார். சக ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென நீரில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கொல்கத்தா துறைமுக அதிகாரிகள் மற்றும் மேற்கு துறைமுக காவல்துறையினர் மீட்புப் பணியில் இறங்கினர்.
கடற்படை மூழ்காளர்கள் உதவியுடன் நீண்ட தேடுதலுக்குப் பிறகு மாலுமியின் உடல் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த மாலுமி எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.