நமீபியாவை வீழ்த்திய இந்திய அணி அடுத்ததாக பாகிஸ்தானுடன் மோத கொழும்பு பயணம்
February 13, 2026

டி20 உலகக் கோப்பையில் நமீபியாவை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தற்போது கொழும்பு சென்றுள்ளது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியின் சூப்பர் 8 வாய்ப்பு உறுதியாகும்.
புள்ளிவிவரப்படி இந்திய கை ஓங்கியிருந்தாலும் கொழும்பு வானிலை ரசிகர்களுக்கு கவலையளிக்கிறது. இந்த முக்கியமான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அபிஷேக் சர்மா மீண்டும் அணியில் இணைவது குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.