சில்லறை பணவீக்கத்தைக் கணக்கிடுவதில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு

சில்லறை பணவீக்கத்தைக் கணக்கிடுவதில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு

நடப்பு ஜனவரி மாதத்தில் நாட்டின் சில்லறை பணவீக்கம் 2.75 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு புதிய முறையில் இந்தப் புள்ளிவிவரம் கணக்கிடப்பட்டுள்ளது. முன்பு 2012-ஆம் ஆண்டு அடிப்படையாக இருந்த நிலையில், தற்போது நுகர்வோர் விலைக் குறியீட்டு முறையில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விலைவாசி நிலவரத்தைத் துல்லியமாக அறியவே இந்த மாற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய கணக்கீட்டின்படி ஜனவரியில் பணவீக்கம் 4.26 சதவீதமாக இருந்தது. தற்போது பொருட்களின் எண்ணிக்கை 259-லிருந்து 308-ஆகவும், சேவைகள் 40-லிருந்து 50-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதால், சந்தையின் நிதர்சனமான நிலையை இந்தப் புதிய தரவுகள் பிரதிபலிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *