நெட்வொர்க் கோளாறை பயன்படுத்தி இளைஞரின் வங்கிக் கணக்கிலிருந்து லட்சக்கணக்கில் அபேஸ்
February 13, 2026

முர்ஷிதாபாத் எல்லைப் பகுதியில் நிலவும் நெட்வொர்க் சிக்கலைச் சாதகமாகப் பயன்படுத்தி சைபர் மோசடி கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி போலப் பேசிய மர்ம நபர்கள், ஒரு இளைஞரின் மொபைலில் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். இதன் மூலம் அவரது இரண்டு வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் 2.5 லட்சம் ரூபாயை மோசடியாளர்கள் திருடியுள்ளனர்.
அந்நிய நபர்கள் அனுப்பும் லிங்குகளைக் கிளிக் செய்வதோ அல்லது தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதோ மொபைலின் கட்டுப்பாட்டை மோசடியாளர்களிடம் ஒப்படைத்துவிடும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.