பாகிஸ்தான் மோதலுக்கு முன் நமீபியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

பாகிஸ்தான் மோதலுக்கு முன் நமீபியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

டி20 உலகக் கோப்பையில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மிரட்டல் வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்திய நமீபியா 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷனின் அதிரடி 61 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் 52 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டன. வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேலின் சுழலில் சிக்கி நமீபியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், இஷான் மற்றும் திலக் வர்மாவின் கூட்டணி ஸ்கோரை உயர்த்தியது. நமீபிய கேப்டன் எராஸ்மஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கட்டுப்படுத்த முயன்றார். அமெரிக்காவைத் தொடர்ந்து நமீபியாவையும் வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்னதாக தனது பலத்தை நிரூபித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *