செங்கோட்டை தாக்குதலில் ஜெய்ஷ் தொடர்பு ஐநா அறிக்கையில் உறுதி

டெல்லி செங்கோட்டை பகுதியில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு நேரடி தொடர்பு இருப்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. 15 பேர் உயிரிழந்த இந்த சம்பவத்தில் இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மேலும், மசூத் அசார் பெண்களைக் கொண்டு ‘ஜமாத்-உல்-முமினத்’ என்ற புதிய பிரிவை உருவாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்களை கடத்துவதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் பெண்களை பயன்படுத்துவது பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவே தீவிரவாத அமைப்புகள் இத்தகைய பெண் படைகளை உருவாக்கி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.