ரஷ்யாவில் வாட்ஸ்அப் தடை அதிரடி உத்தரவிட்டார் புதின்

ரஷ்யாவில் வாட்ஸ்அப் தடை அதிரடி உத்தரவிட்டார் புதின்

ரஷ்யாவில் மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் தளத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் முழுமையான தடை விதித்துள்ளார். ரஷ்யாவின் சட்டதிட்டங்களுக்கு மெட்டா நிறுவனம் கீழ்ப்படியாததே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று மாஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் சூழலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வாட்ஸ்அப் டொமைன்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கு மாற்றாக ‘மேக்ஸ்’ (MAX) என்ற உள்நாட்டு செயலியைப் பயன்படுத்துமாறு ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் செயலி அரசுப் பணிகளை எளிதாக்கும் என்று ரஷ்யா கூறினாலும், இது பயனர்களைக் கண்காணிக்க உதவும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே பலமுறை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *