வங்கதேச தேர்தலை ரத்து செய்ய ஷேக் ஹசீனா அதிரடி கோரிக்கை
February 13, 2026

வங்கதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலை ஒரு ‘திட்டமிட்ட நாடகம்’ என்று கூறி அதை ரத்து செய்ய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார். அவாமி லீக் கட்சி இல்லாமல் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை பொதுமக்கள் புறக்கணித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். வாக்குச்சாவடி பிடிப்பு மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த தேர்தல் ஜனநாயக விரோதமானது என்று விமர்சித்துள்ளார்.
வெறும் 48 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், மக்கள் தனது அழைப்பை ஏற்று தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக ஹசீனா குறிப்பிட்டார். நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும், அவாமி லீக் பங்கேற்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை மீண்டும் நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.