ராகுலின் நேரடி கேள்வி: பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் பிடித்த மத்திய அமைச்சர்கள்!

நாடாளுமன்ற வளாகத்தில் புதன்கிழமை அன்று முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பரபரப்பான அரசியல் சூழல் அரங்கேறியது. நாட்டின் விவசாயம் மற்றும் பால் உற்பத்திச் சந்தையை வெளிநாட்டினரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ராகுல் காந்தி நேரடியாக அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராகுல் காந்தி, “வாருங்கள், இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்கலாம்” என்று அழைத்தார். ஆனால், ராகுலின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சர்கள் இருவரும் அந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறினர்.
அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயம் போன்ற முக்கியத் துறைகளை வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் விடுவது, நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்தார். அமைச்சர்களின் இந்த மௌனமும், பின்வாங்கலும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.