சிங்கிள்ஸா? கவலைய விடுங்க.. தோழிகளுடன் ‘கேலன்டைன்ஸ் டே’ கொண்டாடுங்க!
காதலர் தினத்திற்கு இன்னும் ஒருநாளே உள்ள நிலையில், ‘வாழ்க்கையில் இன்னும் ஒரு ஜோடி சேரவில்லையே’ என வருத்தப்படுபவரா நீங்கள்? கவலையை விடுங்கள்! உங்களுக்காகவே இருக்கிறது ‘கேலன்டைன்ஸ் டே’ (Galentine’s Day).
என்னது கேலன்டைன்ஸ் டேயா?
பிப்ரவரி 14 காதலர் தினம் என்றால், அதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 13 ‘கேலன்டைன்ஸ் டே’ ஆக கொண்டாடப்படுகிறது. இது முழுக்க முழுக்க பெண்களின் நட்புக்கான நாள். அமெரிக்காவின் ‘பார்க்ஸ் அண்ட் ரிக்ரியேஷன்’ என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்த இந்த கலாச்சாரம், தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது.
நட்பின் வலிமை:
நம்முடைய கோபம், அழுகை, ரகசியங்கள் என அனைத்தையும் தயக்கமின்றி பகிரக்கூடிய ஒரே இடம் நட்பு தான். காதலனிடம் கூட சொல்ல முடியாத விஷயங்களை ஒரு தோழியிடம் எளிதாகக் கூறிவிடலாம். ஆண்களின் நட்பை (Bromance) கொண்டாடும் சினிமாக்கள் பல உண்டு. ஆனால், பெண்களின் ஆழமான நட்பைப் போற்றும் வகையில் இந்த ‘கேலன்டைன்ஸ் டே’ உருவெடுத்துள்ளது.
எப்படி கொண்டாடலாம்?
இந்த நாளில் உங்கள் நெருங்கிய தோழிகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களுக்குப் பிடித்தமான பரிசுகளை வழங்கி மகிழுங்கள். இதோ சில ஐடியாக்கள்:
- பெயரிட்ட காபி மக்: உங்கள் தோழியின் பெயர் அல்லது உங்கள் நட்பை உணர்த்தும் புகைப்படத்துடன் கூடிய காபி மக்.
- ஸ்கின்கேர் கிட்: சருமப் பராமரிப்பு சாதனங்கள் அடங்கிய தொகுப்பு.
- வசதியான காலணிகள்: வீட்டில் அணியக்கூடிய மென்மையான ‘டெடி’ ரக ஸ்லிப்பர்கள்.
- சிறு குறிப்புகள்: உங்கள் நட்பின் முக்கியத்துவத்தை விவரிக்கும் ஒரு சிறிய கடிதம்.
இந்த முறை பிப்ரவரி 13-ம் தேதியை உங்கள் ‘கேலன்’களுடன் (தோழிகளுடன்) உற்சாகமாகக் கொண்டாடுங்கள்!