சரத் பவார் திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனை முக்கிய அறிக்கை
February 9, 2026

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது மருத்துவக் குழுவினர் அவரின் ஆரோக்கிய நிலை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். வயது மூப்பு மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட சிகிச்சை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இதயயியல் துறைத் தலைவர் டாக்டர் பர்வேஸ் கிராண்ட் கூறுகையில், அடுத்த சில மணிநேரங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் என்றார். தற்போது வரை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.