வருமான வரி முறையில் அதிரடி மாற்றம் ஏப்ரல் 1 முதல் அமலாகிறது உங்கள் பாக்கெட்டில் இதன் தாக்கம் என்ன

மத்திய அரசு கொண்டு வரும் புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வரி செலுத்தும் முறையை எளிமையாக்கும் நோக்கில் விதிகளின் எண்ணிக்கை 511-லிருந்து 333-ஆகவும், படிவங்களின் எண்ணிக்கை 190-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பிப்ரவரி 22-க்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த சட்ட மாற்றத்தில் வரி விகிதங்களில் மாற்றங்கள் ஏதுமில்லை என்றாலும், ஐடிஆர் படிவங்கள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தணிக்கை தேவையில்லாத வணிகங்களுக்கான வரி தாக்கல் காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க முன்மொழியப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் வரி நிபுணர்களின் உதவியின்றி சுயமாகவும் பிழையின்றியும் வரி தாக்கல் செய்யும் வகையில் டிஜிட்டல் நடைமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.