ரேபரேலியில் அதிவேக கார் மோதி பயங்கரம்: விருந்து முடிந்து திரும்பிய 4 இளம்பெண்கள் துடிதுடிக்க மரணம்
February 9, 2026

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் கட்டுமானத்தில் உள்ள கங்கை விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோர விபத்து நிகழ்ந்தது. கிராமத்து விருந்து ஒன்றில் கலந்துகொண்டு பிரசாதத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த எட்டு சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது. இந்த விபத்தில் ஹிமான்ஷி, ஷாலினி உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்ற ஐந்து பேர் தற்போது மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ள நிலையில், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். கட்டுமானப் பணியில் உள்ள சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹர்ஷிதா மாத்தூர் மற்றும் எஸ்பி ரவிக்குமார் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.