ஆயிரம் ரூபாய்க்கு மனைவியை விற்ற கணவன் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையான கொடூரம்

ஆயிரம் ரூபாய்க்கு மனைவியை விற்ற கணவன் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையான கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுனில் கணவனே தனது மனைவியை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி எரிவாயு அடுப்பு வேலை இருப்பதாகக் கூறி மனைவியை அழைத்துச் சென்ற கணவன், அங்கு காத்திருந்த தனது நண்பர்களிடம் அவரை ஒப்படைத்துள்ளார். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை ஒரு காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கணவனிடம் முறையிட்டபோது, உன்னை வைத்து இப்படித்தான் பணம் சம்பாதிப்பேன் என அவர் திமிராகப் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *