நிச்சயமான மாதாந்திர வருமானம் தரும் அஞ்சலகத்தின் இந்த அதிரடித் திட்டம் பற்றித் தெரியுமா

அஞ்சலகத்தின் முதியோர் சேமிப்புத் திட்டம் (SCSS) மூலம் மூத்த குடிமக்கள் இப்போது மாதம் ரூ. 17,000 வரை நிலையான வருமானத்தைப் பெற முடியும். வங்கி வைப்புத் தொகையை விடக் கூடுதல் வட்டியாக 8.2 சதவீதத்தை வழங்கும் இத்திட்டத்தில், ரூ. 25 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 2.05 லட்சம் வட்டி ஈட்டலாம். இது நேரடியாக மத்திய அரசால் நிர்வகிக்கப்படுவதால், முதலீட்டாளர்களுக்கு முழுமையான பாதுகாப்புடன் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கும் கிடைக்கிறது.
இத்திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்ற 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யத் தகுதியுடையவர்கள். ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இத்திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். சந்தை ஏற்ற இறக்கங்கள் இல்லாத இத்திட்டம், ஓய்வுக்கால வாழ்க்கையை எவ்வித நிதி நெருக்கடியும் இன்றி அமைதியாகக் கழிக்க விரும்பும் முதியோர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான நிதி ஆதாரமாகத் திகழ்கிறது.