மாம்பழச் சின்னம் யாருக்கு? பாமக வழக்கில் அதிரடித் திருப்பம்: டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய தேர்தல் ஆணையம்!
February 9, 2026

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இரு தரப்பினரிடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மாம்பழச் சின்னம் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாமக போன்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தற்போது தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு ஏற்கப்பட்டு விசாரணை நடைபெற்றால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மாம்பழச் சின்னம் கோரி ராமதாஸ் தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு தாமதமாக வாய்ப்புள்ளது. இது ராமதாஸ் தரப்பிற்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.