அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு லாபமா அமுல் நிறுவனத்தின் முக்கிய விளக்கம்

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளுக்கு லாபமா அமுல் நிறுவனத்தின் முக்கிய விளக்கம்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுந்துள்ள அச்சங்கள் தேவையற்றவை என்று அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளையும் பால் உற்பத்தித் துறையையும் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க சந்தையில் இந்திய தயாரிப்புகளுக்கான வாய்ப்புகளையும் எளிதாக்கும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

குறிப்பாக, இறக்குமதி வரி 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பது இந்தியப் பொருட்களுக்குப் புதிய சந்தைகளைத் திறந்துவிடும் என அவர் குறிப்பிட்டார். கால்நடைத் தீவனங்கள் குறித்துப் பேசுகையில், உள்நாட்டில் போதுமான இருப்பு உள்ளதால் இறக்குமதியால் பாதிப்பு ஏற்படாது என்றும், இந்த ஒப்பந்தம் விவசாயத் துறையின் எதிர்காலத்தை மேம்படுத்தும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *