காருக்குள் மர்ம மரணம்: மேம்பாலம் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

காருக்குள் மர்ம மரணம்: மேம்பாலம் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

டெல்லி பீராகர்ஹி மேம்பாலம் அருகே நீண்ட நேரமாக நின்றிருந்த காருக்குள் பெண் உட்பட மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த காரை சோதனையிட்ட போலீசார், மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

காரின் ஜன்னல்கள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், ஏசி இயங்கியதால் ஏற்பட்ட ‘கார்பன் மோனாக்சைடு’ நச்சு வாயு கசிவே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *