இஸ்லாமாபாத் மசூதியில் பயங்கர தற்கொலை படை தாக்குதல்: இந்தியாவின் மீது பாகிஸ்தான் பழி – டெல்லி கடும் கண்டனம்!
February 7, 2026

இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த தற்கொலை படை தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த புகாரை அடிப்படை ஆதாரமற்றது என இந்தியா நிராகரித்துள்ளது. தனது நாட்டின் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிய பாகிஸ்தான், மற்றவர்களை குற்றம் சாட்டுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசும் முறையான விசாரணை இன்றி பழி சுமத்துவது பொறுப்பற்ற செயல் என்று பாகிஸ்தானை விமர்சித்துள்ளது.