ஈரானுடன் வர்த்தகம் செய்தால் கடும் வரி; உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
February 7, 2026

ஈரானுடன் நேரடி அல்லது மறைமுக வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஓமனில் இரு நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில், 25 சதவீத வரி விதிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தக சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் முக்கிய வர்த்தக பங்காளிகளான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த உத்தரவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.