மக்களவையில் மோடி மிஸ்ஸிங்! சபாநாயகரின் விளக்கத்தை விமர்சித்த மஹுவா மொய்த்ரா
February 6, 2026

குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலளிக்க பிரதமர் மோடி வராததால் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டதால் சபையில் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே பிரதமரை வர வேண்டாம் என்று கூறியதாக சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கமளித்தார். இதனை கிண்டல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “பெண் எம்.பி.க்கள் பிரதமரை கடித்துவிடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.