ட்ரம்ப் கொடுத்த நெருக்கடி! சாபஹார் துறைமுகத்திலிருந்து வெளியேறுகிறதா இந்தியா?

ஈரானின் சாபஹார் துறைமுகத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள கடும் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி வரி எச்சரிக்கையினால் இந்தியா இத்திட்டத்திலிருந்து பின்வாங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நடப்பு மத்திய பட்ஜெட்டில் சாபஹார் துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இருப்பினும், இத்துறைமுகப் பணிகளுக்கான அமெரிக்காவின் விலக்குக் காலத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்குப் போட்டியாகவும், மத்திய ஆசிய நாடுகளுடனான வர்த்தகத்திற்கும் சாபஹார் மிக முக்கியமானது. அமெரிக்கா வழங்கிய ஆறு மாத கால விலக்கு ஏப்ரல் 26-ல் முடிவடையும் நிலையில், இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.