ஆன்லைன் கேம் மோகத்தால் நேர்ந்த கொடூரம், பெற்றோர் தடுத்ததால் 10-வது மாடியிலிருந்து குதித்து மூன்று சகோதரிகள் தற்கொலை

செய்தி பிரிவு : ஆன்லைன் விளையாட்டு மோகம் ஒரு குடும்பத்தையே எப்படி சீரழிக்கும் என்பதற்கு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. ஆன்லைன் கேம் விளையாட பெற்றோர் தடை விதித்ததால், ஆத்திரமடைந்த மூன்று இளம் சகோதரிகள் 10-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இணையதள உலகில் குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் மற்றும் எதில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.
தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள் 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் எழுதிய 8 பக்க கடிதத்தில் ‘கொரியன் லவர்’ என்ற கேம் மீதான தீவிர பற்று பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கேமில் கொடுக்கப்பட்ட சவால்களை நிறைவேற்ற அவர்கள் பள்ளிக்குச் செல்வதைக் கூட தவிர்த்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் மனநலம் மற்றும் ஆன்லைன் அடிமைத்தனம் குறித்த ஒரு தீவிரமான சமூகப் பிரச்சனையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.