எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் உள்நாட்டு காமிகேஸ் ட்ரோன்கள் இனி ராணுவத்தின் வசம்

செய்தி பிரிவு : இந்திய ராணுவத்தின் பலத்தை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜேஎம்-1 காமிகேஸ் ட்ரோன்களின் மூன்றாவது தொகுப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட இந்த ட்ரோன்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பது நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும். எல்லையில் அச்சுறுத்தல்களை முறியடிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நவீன தொழில்நுட்பம் ஒரு பெரும் கவசமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் கூட இந்த ட்ரோன்கள் மிகத் துல்லியமாக செயல்படும் திறன் கொண்டவை. எதிரிகளின் இலக்கை குறிவைத்து வானில் வட்டமிட்டு, சரியான நேரத்தில் தாக்கும் இந்த முறை ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை தவிர்க்க உதவும். 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன்கள், தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் தற்காப்பு அரணை பலப்படுத்துவதுடன், எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும்.