செரிமானப் பிரச்சனையால் அவதியா? இட்லி தோசை தவிர இந்திய உணவுகளில் இவ்வளவு ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறதா!

செரிமானப் பிரச்சனையால் அவதியா? இட்லி தோசை தவிர இந்திய உணவுகளில் இவ்வளவு ஆரோக்கியமான விஷயங்கள் இருக்கிறதா!

செய்தி பிரிவு : வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இட்லி மற்றும் தோசையைத் தவிர, இந்தியாவிலேயே பல பாரம்பரிய புளித்த உணவுகள் உள்ளன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இந்த உணவுகள் சாதாரண மக்களின் செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும் இயற்கையாகவே வழங்குகின்றன.

அசாமின் ‘கோரிசா’, வங்காளத்தின் ‘பாந்தா பாத்’ மற்றும் இமயமலைப் பகுதியின் ‘குந்த்ருக்’ போன்ற உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்தவை. குறிப்பாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தயிர் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட ‘காஞ்சி’ போன்ற பானங்கள் உடலுக்குத் தேவையான புரோபயாடிக்குகளை வழங்குகின்றன. கடைகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, இதுபோன்ற பாரம்பரிய உணவுகளை உட்கொள்வது உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *