உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறாரா சூர்யகுமார் யாதவ் விளக்கம்

உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுகிறாரா சூர்யகுமார் யாதவ் விளக்கம்

டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சித் தொடரில் 5 போட்டிகளில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து சஞ்சு ஏமாற்றமளித்தார். மறுபுறம், இஷான் கிஷன் அதிரடி சதம் விளாசி 215 ரன்களுடன் தனது வருகையை பலமாக பதிவு செய்துள்ளார். கடைசிப் போட்டியில் சஞ்சுவுக்குப் பதில் இஷான் கீப்பிங் செய்ததும் அவர் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், இது திட்டமிடப்பட்ட ஒரு சுழற்சி முறை மட்டுமே என்று கூறினார். தொடருக்கு முன்பே இருவருக்கும் கீப்பிங் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், இஷான் கிஷனின் அபாரமான ஃபார்ம் மற்றும் திலக் வர்மாவின் வருகை ஆகியவை சஞ்சு சாம்சனை பெஞ்சில் அமர வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அணி நிர்வாகம் யாரைத் தேர்வு செய்யும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *