புகைப்பழக்கத்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

புகைப்பிடித்தல் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை உண்டாக்குவது மட்டுமல்லாமல், ஆண்களின் இனப்பெருக்க திறனை பெருமளவில் பாதிக்கிறது. ஐரோப்பிய சிறுநீரகவியல் ஆய்வின்படி, 5000 ஆண்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் புகைப்பிடித்தல் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது. புகையிலையில் உள்ள நச்சுக்கள் விந்தணுக்களின் கட்டமைப்பை சிதைத்து, கருத்தரிப்பதில் சிக்கல்களை உருவாக்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, சிகரெட் மட்டுமின்றி புகையிலை சார்ந்த ஜர்தா, கைனி போன்ற பொருட்களும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகின்றன. இது ஆண்களுக்கு மட்டுமின்றி, மறைமுக புகையிலை சுவாசம் மூலம் பெண்களின் கருமுட்டை ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஏற்கனவே மலட்டுத்தன்மை பாதிப்பு உள்ளவர்களுக்கு இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால், ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு புகையிலை பழக்கத்தை கைவிடுவது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது.