இந்திய விமானப்படையில் இணையப்போகும் 114 போர் விமானங்கள் மீண்டும் ரஃபேல் ஆதிக்கம் செலுத்துமா

இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க 114 பல்துறை போர் விமானங்களை வாங்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மெகா ஒப்பந்தத்தில் பிரான்சின் ரஃபேல் போர் விமானம் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே ரஃபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளதால் அதன் பராமரிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் இந்தியாவில் தயார் நிலையில் உள்ளன. இதனால் புதிய வகை விமானங்களுக்கு தனி உள்கட்டமைப்பு செலவுகளை தவிர்க்க ரஃபேல் தொழில்நுட்பத்தையே மீண்டும் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த 114 விமானங்களின் பெரும்பகுதி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையாகும். தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சிறந்த செயல்பாட்டுத்திறன் காரணமாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்களை விட ரஃபேல் தற்போதைய நிலையில் அதிக வாய்ப்புள்ள தேர்வாக கருதப்படுகிறது.