மும்பையில் டெலிவரி பாய் வேடத்தில் வந்த மர்ம நபர், மாணவியை கத்தியால் குத்தி கொலை முயற்சி

மும்பையில் டெலிவரி பாய் வேடத்தில் வந்த மர்ம நபர், மாணவியை கத்தியால் குத்தி கொலை முயற்சி

மும்பை அந்தேரி பகுதியில் பார்சல் டெலிவரி செய்ய வந்ததாகக் கூறி எம்.எஸ்.சி மாணவி ஒருவரை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் மாணவி தனியாக இருந்தபோது, போலி அடையாள அட்டையுடன் நுழைந்த அந்த நபர், கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துள்ளார். பின்னர் மாணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றபோது, சத்தம் கேட்டு அண்டை வீட்டார் திரண்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

காயமடைந்த மாணவி தற்போது செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்திய நபர் தனது முகத்தை ஒரு காகிதக் கோப்பால் மறைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து எம்ஐடிசி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *