வோடபோன் ஐடியாவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவான ரீசார்ஜ் திட்டம் இதுதான்

வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 859 ரூபாயில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மிகச்சிறந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன. கூடுதல் சிறப்பாக, நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தடையற்ற டேட்டா மற்றும் வாரநாட்களில் மீதமுள்ள டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்தும் ‘டேட்டா ரோல்ஓவர்’ வசதியும் இதில் உள்ளது.
5ஜி போன் வைத்துள்ள பயனர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் வரம்பற்ற 5ஜி சேவையை பெற முடியும். அதே நேரத்தில், ரிலையன்ஸ் ஜியோ இதே 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை 799 ரூபாய்க்கு வழங்குகிறது, இது வோடபோன் மற்றும் ஏர்டெல்லை விட 60 ரூபாய் குறைவாகும். ஏர்டெல் நிறுவனம் 859 ரூபாய்க்கு இதே போன்ற டேட்டா வசதிகளுடன் ஸ்பேம் அலர்ட் மற்றும் ஏஐ கிளவுட் நன்மைகளை கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.