சூர்யகுமார் யாதவ் அடிக்கடி மெசேஜ் அனுப்புவார் என்று பாலிவுட் நடிகை வெளியிட்ட பகீர் தகவல்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சூர்யகுமார் தனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்புவார் என்றும், தற்போது அவர்கள் பேசுவதில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களுடன் டேட்டிங் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும், இதுபோன்ற கிசுகிசுக்களை தான் விரும்புவதில்லை என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவிஷாவுடன் திருப்பதி திருமலை கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் அவர் கலந்துகொண்டார். தென்னாப்பிரிக்க தொடர் வெற்றிக்குப் பிறகு, ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்த சூர்யகுமார் தயாராகி வருகிறார்.