இந்தியாவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்த அதிபர் ஜெலென்ஸ்கி

ரஷ்ய அதிபர் புடினின் இல்லத்தின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததற்கு உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா ஆதரிப்பது ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறினார். உக்ரைன் குழந்தைகள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டபோது மவுனம் காத்த நாடுகள், தற்போது ஆதாரமில்லாத ஒரு சம்பவத்திற்காக குரல் கொடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் இந்த இரட்டை நிலைப்பாடு அமைதி முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். ரஷ்யா திட்டமிட்டே இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும், இந்தியா போன்ற நாடுகள் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்தியாவின் இந்த சமீபத்திய எதிர்வினையால் தங்கள் நாடு மிகுந்த கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.