40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய 4 மருத்துவ பரிசோதனைகள்

செய்தி பிரிவு : ஆண்களுக்கு 40 வயது என்பது உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் ஏற்படும் முக்கியமான கட்டமாகும். இந்த வயதிற்குப் பிறகு இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம் மற்றும் 3-5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது பக்கவாதம் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
சர்க்கரை நோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் கண்டறிய ரத்த சர்க்கரை மற்றும் பிஎஸ்ஏ பரிசோதனைகள் இந்த வயதில் மிகவும் அவசியமானவை. அத்துடன் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை உறுதி செய்ய எல்எஃப்டி மற்றும் கேஎஃப்டி சோதனைகளை மேற்கொள்வது நல்லது. ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் நோய்களைச் சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும் என்பதால் முறையான மருத்துவ பரிசோதனைகளை ஆண்கள் தவிர்க்கக்கூடாது.