கடமையில் இருந்த போலீஸ் அதிகாரி காலில் விழுந்த விவகாரம் – மௌனம் கலைத்த தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி

ராய்ப்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் காலில் விழுந்து ஆசி பெற்ற காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாபா பாகேஸ்வர், சீருடை அணிந்திருப்பவர்களும் மனிதர்களே என்றும் அவர்களுக்கும் தனிப்பட்ட பக்தி மற்றும் கலாச்சார விழுமியங்கள் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதனை ஒழுக்கமின்மையாக கருதுவது தேவையற்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறையினர் இயந்திரங்கள் அல்ல, அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று கூறிய அவர், பண்டிகை காலங்களிலும் குடும்பத்தை பிரிந்து பணியாற்றும் அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார். ஒரு நபர் தனது குருவிடம் பக்தி செலுத்துவது அவரது கடமையை பாதிக்காது என்றும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துவது முறையல்ல என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.