மத்திய அரசின் இலவச ஏஐ பயிற்சி வகுப்புடன் இனி நீங்களும் செயற்கை நுண்ணறிவு நிபுணராகலாம்

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ‘யுவ ஏஐ ஃபார் ஆல்’ என்ற புதிய இலவச ஆன்லைன் பயிற்சியைத் தொடங்கியுள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த 4.5 மணிநேரப் பயிற்சியானது, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த அடிப்படை அறிவை மிகவும் எளிமையான முறையில் வழங்குகிறது. ஃபியூச்சர் ஸ்கில்ஸ் பிரைம் மற்றும் ஐகாட் கர்மயோகி போன்ற தளங்களில் கிடைக்கும் இந்தப் பயிற்சியை யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் பயில முடியும்.
மொத்தம் ஆறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த வகுப்பில், அன்றாட வாழ்வில் ஏஐ-இன் பயன்பாடு மற்றும் அதன் பாதுகாப்பான செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகின்றன. சுமார் 1 கோடி இந்தியர்களுக்கு இந்தப் பயிற்சியை வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். இது இளைஞர்கள் எதிர்கால டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தங்களைச் தயார்படுத்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.