உடல் காட்டும் இந்த 5 எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள் புற்றுநோய் அபாயமாக இருக்கலாம்

புற்றுநோய் உடலில் மெதுவாகப் பரவக்கூடிய ஒரு நோயாகும், இதன் ஆரம்ப கால அறிகுறிகளை கண்டறிவது மிகவும் அவசியம். உணவுக்கட்டுப்பாடு இன்றி திடீரென எடை குறைதல், ஓய்வு எடுத்தாலும் நீங்காத அதீத சோர்வு மற்றும் தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய மாற்றங்களைச் சாதாரணமானவை என்று கருதி அலட்சியப்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
நீண்ட கால உடல் வலி, மலம் அல்லது சிறுநீரில் இரத்தம் வருதல் மற்றும் ஆறாத காயங்கள் போன்றவை நுரையீரல் அல்லது குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது உயிரைக் காப்பாற்ற உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.